திருப்பூர்: இணைய தளத்தில் மின் கட்டணம் செலுத் தும் முறை குறித்து, மின் வாரியம் தெளிவுபடுத்தி உள்ளது.
திருப்பூர் மின்பகிர் மான வட்ட மேற் பார்வை செயற்பொறி யாளர் நிர்மலதா வெளி யிட்டுள்ள அறிக்கை: மின் கட்டணங்களை இணைய தளம் வழியாக செலுத்தும் மின் நுகர் வோர், இணைய தளம் மூலம் www.tneb.in என்ற இணைய தளத்தில் நுழையவும்; அதில் காணப்படும் "பில்லிங் சர்வீசஸ்' என்ற தலைப் புக்குள் "ஆன்லைன் பில் பேமன்ட்' என்ற துணை தலைப்பை "கிளிக்' செய்து மின் கட்டண நுழைவாயில் "இன்டர் நெட் பேமன்ட் கேட்வே' என்ற படிவத்தில் கேட்கப் பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து, மின் கட் டணத்தை செலுத்தலாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி ஆகியவற்றின் ஏ.டி.எம்., அட்டைகள் மூல மாகவோ, அனைத்து மாஸ்டர்/விசா கடன் அட்டைகள் மூலமாகவோ இணைய தளத்தில் பணம் செலுத்தலாம். இணைய தள வணிக சேவை மூலம் மின் கட் டணம் செலுத்தும் வசதி ஆக்சிஸ் பாங்க், ஐ.சி.ஐ. சி.ஐ., சிட்டி யூனியன் பாங்க், ஐ.ஓ.பி., - ஐ.பி., ஆகிய வங்கிகளில் உள்ளது, என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment