கோவை : கோவை மாநகரிலுள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் 15 பள்ளிகளை தத்தெடுத்து, அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கோவை, செல்வபுரம், தெலுங்குபாளையத்திலுள்ள ஸ்ரீ வைதீஸ்வரா வித்யாலயம் நடுநிலைப்பள்ளியை தத்தெடுத்துள்ள மாநகர போலீசார், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இத்திட்டத்தின் துவக்க விழா, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்கான கம்ப்யூட்டர் சாதனங்களையும், சத்துணவு மையத்துக்கு தேவையான சமையல் பாத்திரங்களையும் போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நேற்று வழங்கினார். இவ்விழாவில், ஸ்ரீ வைதீஸ்வரா வித்யாலயம் நடுநிலைப் பள்ளியின் தாளாளர் அர்ஜுனன், மாவட்ட துவக்க கல்வி அலுவலர் அய்யண்ணன், பென்ஸ் கிளப் தலைவர் சக்தி, "ராக்' அமைப்பின் துணைத்தலைவர் ரவிசெல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளி தத்தெடுப்பு திட்டம் குறித்து, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு அளித்த பேட்டி: கோவை நகரில் மொத்தம் 15 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. ஸ்டேஷன் தோறும் தலா ஒரு அரசு பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளியை தேர்வு செய்து, தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி உக்கடம், கோட்டைமேட்டிலுள்ள மன்ப உல் உலூம் பள்ளி, செல்வபுரம் பகுதியிலுள்ள வைதீஸ் வரா பள்ளிகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன; கழிவறை கட்டும் பணியும் துவக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மற்ற பகுதிகளிலும் அடிப்படை வசதிக ளற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை தேர்வு செய்து, உதவி வழங்குவதற் கான முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதற்கான நிதி உதவியை "லீட் இந்தியா 2020' என்ற தன்னார்வ அமைப்பு வழங்குகிறது. பள்ளி குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் மூலமாக அவர்களது கல்வித்திறன், சிந்தனைத்திறனை மேம்படுத்த முடியும்.
அதே நேரத்தில், போலீஸ் பணி குறித்து பள்ளி மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலீஸ் துறையின் கட்டமைப்பு மற்றும் நடவடிக்கை யுக்திகளை பள்ளி மாணவ, மாணவியர் நேரில் கண்டு விழிப்புணர்வு பெறும் வகையில், "போலீஸ் கமிஷனருடன் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன் துவக்கப்பட்டது. பள்ளி தோறும் 60 மாணவ, மாணவியரை அழைத்து போலீசாரின் நடவடிக்கை குறித்து நேரடியான செயல்விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆயுதப்படை பிரிவு, துப்பறியும் மோப்ப நாய் பிரிவு, தடய அறிவியல் துறை, போக்குவரத்து பிரிவு, சட்டம்- ஒழுங்கு, குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரின் பணிகளை மாணவ, மாணவியர் நேரடியாக பார்வையிட்டு வருகின்றனர். இதன் மூலமாக, போலீஸ் - மாணவ, மாணவியரிடையே நெருக்கமான சூழலை ஏற்படுத்தியுள்ளோம். குடிசைப் பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களின் பொழுது போக்குக்கான "பாய்ஸ் கிளப்'கள் சில ஆண்டுகளுக்கு முன் நகரில் ஆரம்பிக்கப்பட்டன. இந்த கிளப்களின் தரத்தை மேம்படுத்தி, போதிய வசதிகள் ஏற்படுத்தப்படும். போலீசார் வழக்கமான பணிகளில் ஈடுபடும் அதே நேரத்தில், சமுதாயத்துக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, கமிஷனர் சைலேந்திரபாபு தெரிவித்தார்.
இந்தியன் வங்கி உதவி: இந்தியன் வங்கி சார்பில், கோவை நகர் மற்றும் புறநகரிலுள்ள 9 அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் சாதனங்கள் நேற்று வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி, தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் நடந்தது. சிங்காநல்லூர், காந்திமாநகர், கணுவாய், தீத்திபாளையம், காட்டம்பட்டி, பரளி பவர் ஹவுஸ், பெரியபுத்தூர், சரவணம்பட்டி, குமிட்டிபதி பகுதிகளிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கான 36 கம்ப்யூட்டர்களை ஐ.ஜி., சிவனாண்டி வழங்கினார். நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் பொதுமேலாளர் பூதலிங்கம், கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி மற்றும் அரசு உயர்நிலைபள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றன
0 comments:
Post a Comment