Friday, December 24, 2010

உதவி கமிஷனர் பொறுப்பேற்பு

கோவை: கோவை மாநகர போலீஸ் ஐ.எஸ்., உதவிக்கமிஷனராக ராஜாராம் நேற்று பொறுப்பேற்றார். மாநகர போலீஸ் நுண்ணறிவுப்பிரிவு (ஐ.எஸ்.,) கூடுதல் துணைக்கமிஷனராக பணியாற்றிய நந்தகுமார், கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். மாற்று அதிகாரியை நியமிக்க கால அவகாசம் தேவைப் பட்டதால், நுண்ணறிவுப் பிரிவு உதவிக்கமிஷனர் பொறுப்பு, மாநகர போலீஸ் கிழக்குப்பகுதி சட்டம் - ஒழுங்கு உதவிக்கமிஷனர் சுரேஷ் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் சப்-டிவிஷனில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய ராஜாராம் அங்கிருந்து மாற்றப்பட்டு, மாநகர போலீஸ் நுண்ணறிவுப்பிரிவு உதவிக்கமிஷனராக நியமிக்கப்பட்டார். எனினும், இவர் உதவிக்கமிஷனராக பொறுப் பேற்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி, "தினமலர்' நாளிதழில் நேற்று வெளியானது. இதையடுத்து, நுண்ணறிவுப்பிரிவு உதவிக்கமினராக ராஜாராம் நேற்று காலையேபொறுப்பேற்றுக்கொண்டார். இவர், இதற்குமுன் மாநகர நுண்ணறிவுப்பிரிவிலும், கோவை மாவட்ட போலீசின் "ஸ்பெஷல் பிராஞ்ச்' பிரிவிலும் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...