Friday, March 11, 2011

அ.தி .மு .க நேர்காணல்-Admk interview

http://epaper.dinamalar.com/DM/COIMBATORE/2011/03/12/photographs/004/12_03_2011_004_012_001.jpg

தொடர்ந்து அதிகரிக்கும் குழந்தைகள் மீதான பாலியல் சித்திரவதை!

கோவை மாநகரம் மற்றும் தமிழக மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்குள் கடந்த ஆண்டில் மட்டும் 26 பெண் குழந்தைகள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடத்தல், கற்பழிப்பு, பாலியல் சித்ரவதை வன்முறைகள் பெண்கள் மீது மட்டுமின்றி, ஏதுமறியா பெண் குழந்தைகள் மீதும் நடத்தப்படுகின்றன. பெரும்பாலான சம்பவங்கள் பெற்றோராலும், உறவினர்களாலும் மறைக்கப்படுகின்றன.

வெளியில் தெரிந்தால் அவமானம் நேரிடும் எனக்கருதி சம்பவத்தை மூடி மறைப்பதால், சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்.

பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகளுக்கு கொடூர மரணம் நேரிடும்போது மட்டுமே வெளிச்சத்துக்கு வருகின்றன.

கடந்த ஆண்டில், கோவை நகரில் பள்ளிக்குச் செல்லவிருந்த 11 வயது பெண் குழந்தையும், உடன் 9 வயதான தம்பியும் கால் டாக்சி டிரைவரால் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு பின் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

தமிழகத்தையே உலுக்கிய இத்துயர சம்பவத்தில் தொடர்புடைய கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன், போலீஸ் "என்கவுன்டரில்' சுட்டுக்கொல்லப்பட்டான். இச்சம்பவத்துக்கு பிறகாவது, குழந்தைகளை பாலியல் சித்ரவதை செய்யும் நபர்கள் மத்தியில் அச்சம் ஏற்படுமென போலீசாரும், பொதுமக்களும் கருதினர்.

ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் கோவை மாநகராட்சி பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமி, தனது மாமாவால் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு பின் கொலை செய்யப்பட்டாள். இதுபோன்ற சம்பவங்கள் பெண் குழந்தைகளின் பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

உண்மையில், மேற்கண்ட சம்பவங்கள் கொலையில் முடிந்ததால்தான் விஷயம் வெளியுலகுக்கு தெரியவந்தது. வெளியுலகுக்கு தெரியாமலும் பல சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

கடந்த ஆண்டில், கோவை மாநகரில் 4 பெண் குழந்தைகள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகினர். ஈவு இரக்கமின்றி குழந்தைகளின் மீது பாலியல் வக்கிரத்தை காட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் உள்ளது.

அதே போன்று, தமிழக மேற்கு மண்டலத்தில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக மொத்தம் 26 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டில் கோவை மாவட்டத்தில் 2, ஈரோட்டில் 5, நீலகிரியில் 1, திருப்பூரில் 5, சேலத்தில் 2, நாமக்கல்லில் 3, தர்மபுரியில் 1 முறையே பெண் குழந்தைகள் பாலியல் சித்வதைக்கு உள்ளாகினர். தவிர, குழந்தைகள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 3 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு, தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி ஆகியோர் போலீ சாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து வக்கீலும், கோவை பாரதியார் பல்கலை செனட் உறுப்பினருமான சண்முகம் கூறியதாவது:பனிரெண்டு வயதுக்கு உட்பட பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பெரும்பாலும் அறிமுகமான நபர்களாலேயே நடக்கின்றன.

அறிமுகமில்லா நபர்களுடன் பெண் குழந்தைகள் செல்வதில்லை. கோவையில் பள்ளிக்குழந்தைகள் இருவர் காரில் கடத்தி கொல்லப்பட்ட சம்பவம், நன்கு அறிமுகமான டாக்சி டிரைவரால் நடந்தது. சவுரிபாளையத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவர், அந்த சிறுமியின் மாமா முறை உறவினர்.

ஏற்கனவே, தங்களுக்கு அறிமுகம் உள்ளதால் பெண் குழந்தைகள் தங்களுக்கு நேரிடப்போகும் ஆபத்தை உணராமல் உடன் சென்றுவிடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க பெண் குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். "சாக்லெட் வாங்கித்தருகிறேன், விளையாட்டு பொருள் வாங்கித்தருகிறேன் என யாராவது அழைத்தால் உடன் செல்லக்கூடாது' என, அறிவுறுத்த வேண்டும்.

கூடுமானவரை பெண் குழந்தைகளை வீட்டில் தனியே விட்டுச் செல்வது; உறவினர் வீடுகளில் விட்டுச் செல்வது, போன்ற செயலை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், தங்களை தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோரும் சொல்லித்தர வேண்டும்.

பாலியல் வன்முறைகளை போலீசாரால் தடுப்பதற்கான வாய்ப்பு மிக, மிக குறைவு; ஆனால், பெற்றோரும், குழந்தைகளும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தவிர்க்க முடியும்.இவ்வாறு, வக்கீல் சண்முகம் தெரிவித்தார்.
Related Posts Plugin for WordPress, Blogger...